இடுகைகள்

விராட் கோலி தாத்தா ஆன பிறகு தான் மகுடம் வெல்வார்.அதிர்ச்சியில் ரசிகர்கள்....!!!

படம்
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.நோய்  தொற்று  அதிகமான நிலையில் ஐபிஎல் தொடர்   கைவிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்  கவுன்சில் அதிகாரியும் முன்னாள் வீரருமான கங்குலி இந்த அறிவிப்பை   வெளியிட்டார்.ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து  கொண்டிருந்த  நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்த வருடமாவது மகுடம் சூட முடியுமா?  என்று எதிர்பார்த்த பெங்களூரு அணிக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வயதான தோற்றத்தில் விராட் கோலி உடன் ஐபிஎல் கோப்பை  இருப்பது போன்றும்.2050ல் சென்னை மும்பை கொல்கத்தா ஆகிய இடங்கள் நீரில் முழ்கி விடும், அப்போது வேண்டுமானலும் பெங்களூரு அணி வெற்றி அடைய.வாய்ப்பு உள்ளது  என்று இணையதளங்களில் மீம் பதிவிடுவோர்.இந்த மீமை வைரலக்கி வருகின்றனர்.

மன அழுத்தத்தை வெல்லுங்கள் மாற்றத்தை உருவாக்குங்கள்.

படம்
மன அழுத்தம் எனும் நோய் தற்போது           வேகமாக பரவி வருகிறது.இக்காலத்தில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது இதற்கு காரணமும் அதுதான்.மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணம் பிரச்சனைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே ஆகும்.தொடர்தோல்வி எண்ணிய விசயம் நடக்காமல் போவது பிடித்தவர்களுடன் ஏற்படும் சண்டை இந்த காரணங்களாலே மக்கள் மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.    பெரும்பாலான மக்கள் உறவுகள் மூலமாக ஏற்படும் கசப்பான விசயங்களாலே மன அழுத்தத்திற்க்கு உள்ளாகிறார்கள்.இரவு நேரங்களில் படுக்கையில் தலையனையை கட்டி பிடித்து  அழுது கொண்டிருப்பார்கள்.  இவர்கள் தனிமையிலே இருப்பார்கள். குற்ற  உணர்வில் சிக்கி கொண்டு இருப்பார்கள்.உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருப்பார்கள்.  இவர்களை மீட்டு எடுக்க மன நல நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மனதை ஊக்கப்படுத்தும் பாடல் அல்லது திரைப்படம் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம். தற்போது தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்த்தில் உள்ளவர்களை மீட்டு...

இந்த வீரருக்கு கொரோனா தொற்றா..?

படம்
இன்று இரவு நடக்க இருந்த பெங்களூரு கொல்கத்தா இடையிலான லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டி எப்ரல் மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் நடை பெற்று வருகிறது. பெங்களூரு அணி ஐபிஎல் மகுடத்தை வெல்ல  வேண்டும் என்று துடிப்புடன் விளையாடி வருகிறது. அதே வேளையில் கொல்கத்தா அணியும் மகுடத்தை வென்று நீண்ட நாட்களாகிறது. எனவே அந்த அணியும்கோப்பையை கோப்பையை வெல்ல ஆர்வத்துடன் உள்ளது.  இரு அணிகளும் மோத உள்ள நிலையில்  இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.    கொல்கத்தா அணியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக வீரர் வருண்    சக்கரவர்த்திக்கும் சந்தீப் வாரியாருக்கும்  கொரோனா தொற்று உள்ளது. கொல்கத்தா  அணியின் நட்சத்திர வீரர்கள் இவர்கள்.கொரோனாஉறுதி ஆகி உள்ள நிலையில்  மற்ற வீரர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை      நடத்த வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளது.அத்துடன் போட்டியையும் ரத்து செய்துள்ளது. இந்த  போட்டியின் அட்டவனை   மாற...

இதற்காக தான் சென்னை அணியில் இருக்கிறேன்,இல்லையென்றால் எப்பொழுதே சென்றிருப்பேன் தோனி சொல்வது என்ன...???

படம்
 சென்னை அணியை வழிநடத்தி  மூன்று முறை ஐபிஎல் மகுடத்தை வென்று கொடுத்தவர் தோனி. இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று கொள்கிறேன் என்று தன்னுடைய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பொழுது சுரேஷ் ரெய்னாவும் தானும் இந்திய அணியில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து இந்திய  அணியில் இருந்து ஓய்வு பெற்று  கொள்வதாக அறிவித்து பரபரப்பை  ஏற்படுத்தினர்.ஆனால் இன்னும் தோனி சென்னை அணிக்காக விளையாடி கொண்டிருக்கிறார்.சென்ற வருடம்  சென்னை அணி பிளே -ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. சென்னை அணி சென்ற வருடம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்க்கு  தள்ளப்பட்டது.சென்ற வருடம் சென்னை அணி கேப்டன் தோனியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது."நீங்கள் இந்த வருடம்  சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற போகிறீர்களா? என்று கேள்வி  கேட்கப்பட்டது.அதற்கு தோனி "கண்டிப்பாக இல்லை" என்று பதில் கூறினார்.அணியில் இருந்து விடை பெறும் போது கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதே எனது  நோக்கம். இதனால் தான் தோனி  இன்னும் ஓய்வு பெறாமல் இருக்கிறார். கடந்த ஆண்டு கடை...

டோனிக்கும் ரெய்னாக்கும் கருத்து வேறுபாடா....???

படம்
 ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில்  நடந்து வருகிறது.இதில் எட்டு அணிகள்  விளையாடி வருகின்றன.சில சமயம்  ஒவ்வொரு அணி வீரர்களுக்கும்  இடையே கருத்து  வேறுபாடு ஏற்படும். வெவ்வேறு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதமும் கைகலப்பும் எற்படும். நடுவர்கள் முலம் பிரச்சனை தீர்க்கப்படும். இதற்கிடையே பிரபல அணியான  சென்னை அணியின் வீரர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளது.    அது வேறு யாரும் அல்ல. நம்ம தல  டோனிக்கும் சின்ன தல ரெய்னாக்கும்  தான். கடந்த சில நாட்களாக இவர்கள் எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக  பேசி  கொள்வதில்லை. ஐதாரபாத் அணிக்கு  எதிரான ஆட்டத்தில் ஸ்லிப்பில் நின்று  கேட்ச் செய்த ரெய்னா அருகில் இருந்த டோனியுடன் மகிழ்ச்சியை  வெளிபடுத்தவில்லை. இவ்வாறு இரு  வீரர்களுக்கும் இடையே கருத்து  வேறுபாடு ஏற்பட்டால் அணி எவ்வாறு  வெற்றியின் பாதையில் செல்லும்.  இவ்வாறு பல நேரங்களில்  நிகழ்ந்துள்ளது.இரு நட்சத்திர  வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு...

மத்திய அரசால் இது சாத்திமா ...?கோவிட் -19 தடுப்பூசி இலவசமா...?

படம்
  கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உயிர்களை கொன்று குவித்து  வருகிறது.தற்போது இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய  அரசு கூறுகையில், முகக்கவசம்  அணிவதன் மூலம் நோய் பரவுவதை  தடுக்க மட்டுமே முடியும். நோயை வெல்ல  வேண்டுமேனில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம். 18 வயது நிரம்பியவர்களுக்கு  இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், 2 வது டோஸை வெளியிட்ட நிலையில், தற்போது 3வது டோஸை தயாரித்து  வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை  அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு  இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய  அரசால் முடியுமா.....? தடுப்பூசி  போட்டாலும் நோய் பரவலை கட்டுப் படுத்த முடியுமா....? என்று பல கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி மாறன் ஆரம்பிச்சுடாரு விடுதலை வெற்றி அடையுமா...?

படம்
பிரபல இயக்குனர் வெற்றி மாறன்   அவர்களின் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் 'அசுரன்' எனும் திரைப்படம் வெளியாகி  வெற்றி அடைந்தது. வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்து உள்ளன. வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்நிலையில்  விஜய்சேதுபதியும், சூரியும் வெற்றி   மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறனர் படத்திற்கு 'விடுதலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் சேதுபதி  வாத்தியாரகவும் சூரி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.இளையராஜா இசை அமைக்கிறார்.எந்த அறிவிப்பும் இன்றி படத்தின் முதல் பார்வை  வெளியானது.வெற்றி மாறன் படம்  என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம்  இருக்காது.எனவே இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.