டோனிக்கும் ரெய்னாக்கும் கருத்து வேறுபாடா....???

 ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 

நடந்து வருகிறது.இதில் எட்டு அணிகள் 

விளையாடி வருகின்றன.சில சமயம்

 ஒவ்வொரு அணி வீரர்களுக்கும்

 இடையே கருத்து  வேறுபாடு ஏற்படும்.

வெவ்வேறு அணி வீரர்களுக்கு இடையே

வாக்குவாதமும் கைகலப்பும் எற்படும்.

நடுவர்கள் முலம் பிரச்சனை தீர்க்கப்படும்.

இதற்கிடையே பிரபல அணியான 

சென்னை அணியின் வீரர்களுக்கு 

இடையே கருத்து வேறுபாடு 

ஏற்பட்டுள்ளது. 



 
அது வேறு யாரும் அல்ல. நம்ம தல

 டோனிக்கும் சின்ன தல ரெய்னாக்கும் 

தான். கடந்த சில நாட்களாக இவர்கள்

எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக  பேசி 

கொள்வதில்லை. ஐதாரபாத் அணிக்கு 

எதிரான ஆட்டத்தில் ஸ்லிப்பில் நின்று 

கேட்ச் செய்த ரெய்னா அருகில் இருந்த

டோனியுடன் மகிழ்ச்சியை 

வெளிபடுத்தவில்லை. இவ்வாறு இரு 

வீரர்களுக்கும் இடையே கருத்து

 வேறுபாடு ஏற்பட்டால் அணி எவ்வாறு 

வெற்றியின் பாதையில் செல்லும்.

 இவ்வாறு பல நேரங்களில்

 நிகழ்ந்துள்ளது.இரு நட்சத்திர

 வீரர்களுக்கு இடையே கருத்து

வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் 

மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அணி நிர்வாகமும் இதனை கண்டு 

கொள்ளாமல் உள்ளது.இரு வீரர்களும் 

நட்சத்திர வீரர்கள் என்பதால் அணி 

நிர்வாகம் என்ன முடிவு எடுப்பது என்று

தெரியாமல் விழி பிதுங்கி உள்ளது.

கருத்துகள்