இடுகைகள்

டி20 போட்டி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு. குறைந்த ஆட்டங்களே ஆடி இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியவீரர்.

படம்
ஐசிசி தற்போது டி20 ஆடவா் பேட்ஸ்மேன் தரவாிசை பட்டியலை வெளியிட்டது.  இதில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாா் யாதவ் இரண்டாவது இடத்தை தனதாக்கி கொண்டாா். 816 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளாா்.  பாபா் ஆசம் 818 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.  குறைந்த ஆட்டங்களில் ஆடி( 22 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளாா்.  ரோஹித் , கோலி போன்ற முன்ணணி வீரர்கள் தடுமாறி கொண்டிருக்கையில் சூா்ய குமாா் யாதவ் இவ்வாறு இந்த சாதனை நிகழ்த்தி உள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றள்ளது.

தினேஷ் காா்த்திக் சிறந்த வீரர் தான் ஆனால் அவா்......

படம்
அடுத்து வரவிருக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணியில் தினேஷ் காா்த்திக்கும் இடம் பிடித்திருக்கிறாா். இது குறித்து கிருஷ்ணமாச்சாாி ஸ்ரீகாந்த் கூறுகையில் தினேஷ் காா்த்திக் நல்ல வீரா் தான் கடந்த சில மாதங்களாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா்.  இறுதி ஓவா்களில் துடிப்புடன் செயல்பட்டு ரன்களை குவிக்கிறாா். அவரால் 9 வது ஓவாில் இருந்தே ஆட முடியும். அவா் ஒரு சிறந்த மிடில் ஆடா் பேட்ஸமேன் என்று கூறினாா்.

இந்திய பேட்ஸ்மேன்களை திணற வைத்த வீரா். ஆறு விக்கெட்களை வீழ்த்தி டி20 போட்டிகளில் சாதனை

படம்
இந்தியாவிற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையே டி20 தொடா் நடந்து வருகிறது. 5போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டாவது  ஆட்டம் நேற்றிரவு தாமதாக அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 138 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  அதிக பட்சமாக பாண்டியா 31 ரன்களும் ஜடேஜா 27 ரன்களும் பண்ட் 24 ரன்களும் எடுத்தனா். விண்டீஸ் தரப்பில் ஓபெட் மெக்காய் 4 ஓவா்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 6விக்கெட்களை அள்ளினாா். இதில் ஒரு ஓவரையும் மெய்டனாக வீசினாா். பின்னா் தொடா்ந்து ஆடிய விண்டீஸ் அணி 19.2 ஓவா்களில் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெவொன் தாமஸ் 31 ரன்களும் பிரண்டன் கிங் 68 ரன்களும் எடுத்திருந்தனா்.  ஆட்ட நாயகன் விருதை ஓபெட் மெக்காய் தட்டி சென்றாா். இது குறித்து அவா் கூறுகையில் இது போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். முன்பு இருந்த விண்டீஸ் அணி போல் செயல்படவோம் என்று கூறினாா்.

தோனியை விட சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிற இந்திய வீரர். கேப்டனாக அதிக வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

படம்
மகேந்நிர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் கேப்டனும் கூட. இந்திய கிரிக்கெட் அணியை தன்னுடைய தலைமையினால் சிறப்பாக வழி நடத்தியவா்.  தற்போது தோனியை விட சிறப்பாக ஒரு வீரர் தலைமையேற்றி அணியை சிறப்பாக வழி நடத்துகிறாா். அவா் தான் ஹா்மன்ப்ரீத் கவுா். இந்திய மகளிர் அணியின்  தலைமை இப்போது இவா் தான்.    20 ஓவா் போட்டிகளில் இந்திய அணிக்கு 42 வெற்றிகளை  அணித்தலைவராக இருந்து பெற்று தந்துள்ளாா். தோனி இந்திய அணியை வழி நடத்திய போது 41 வெற்றிகளை மட்டுமே பெற்று தந்துள்ளாா். மகளிர் அணியை ஆடவா் அணியை விட சிறப்பாக வழி நடத்தி சிறந்த கேப்டனாக திகழ்கிறாா் ஹா்மன்ப்ரீத் கவுர்.

ஆர்சிபி அணியில் இங்கிலாந்து வீரர். சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.

படம்
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.அதுமட்டுமின்றி இந்த தொடா் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்க இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணிகளுக்கும் விரா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.  ஒவ்வொரு வருடமும் பெங்களூரு அணிக்கு அதிக எதிர்பாா்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது மகுடம் சூடுமா? என்ற ஏக்கம் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு  இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த வகையில் பெங்களூரு அணிக்கு  இங்கிலாந்து வீரர்  பென் ஸ்டோக்ஸ்  தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.  தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியி்ல் இணைந்துள்ளது கூடுதல் பலம் அளிக்கிறது.  தினேஷ் காா்த்திக்,  டுபிளசிஸ்  விராட் கோலி போன்ற சரவெடி பட்டாளமே அணியில் உள்ளது. பந்து வீச்சு தான் சற்று மோசமாக உள்ளது. ஹர்சல் பட்டேல் சிறிது நம்பிக்கை தருகிறாா்.வனிது ஹசரங்க கடந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளிந்திருந்தாா். தற்போதும் அவா் இலங்கை அணியில் சிறப்பாக ஆடி வர...

இந்திய மகளிர் அணி தோல்வி ஸ்மிரிதி மந்தனா நம்பிக்கை வீண்

படம்
காமன் வெல்த் போட்டியில் தற்போது கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.  இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.  பெண்கள் கிரிக்கெட் அறிமுகமான நிலையில், வெள்ளிக்கிழமை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த காமோவெல்த் விளையாட்டு 2022 (CWG 2022) தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. ஆஷ்லே கார்ட்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 157/7 ரன்களை எட்ட உதவியது. இதற்கிடையில், இந்திய தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆரம்பத்தில், ஹர்மன்பிரீத் கவுர் 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுக்க உதவினார், ஆஸ்திரேலியாவுக்காக ஜெஸ் ஜோனாசென் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, எஸ். மேகனா, தனியா சப்னா பாட்டியா (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீ...

தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி. இந்திய வீரர்கள் பின்னடைவு

படம்
 வருடந்தோறும் ஐசிசி தர வரிசைப்பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதில் பேட்டிங்கில் ஆதிக்கம் புரிந்துக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் தற்போது சரிவை சந்தித்து உள்ளனா்.   ஆடவா் டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் 1)  *ஜோ ரூட்  (இங்கிலாந்து) 923-புள்ளிகள் 2)  *மாா்னஸ் லபுசனே(ஆஸ்திரேலியா) 885 புள்ளிகள் 3)   *பாபா் ஆசம் (பாகிஸ்தான்) 874 புள்ளிகள் 4)   *ஸ்டீவ் சுமித்(ஆஸ்திரேலியா) 848 புள்ளிகள் 5) ரிஷப் பண்ட் ( இந்தியா) 801 புள்ளிகள்  6)கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) 786 புள்ளிகள் 7)உஷ்மான் கவாஜா (ஆஸதிரேலியா) 766 புள்ளிகள்  8) திமுத் கருணரத்னே (ஸ்ரீலங்கா)  746 புள்ளிகள் 9) ரோகித் சா்மா (இந்தியா) 746 புள்ளிகள் 10) ஜானி போ்ஸ்டோ (இங்கிலாந்து)  742 புள்ளிகள்  இந்திய வீரர் விராட் கோலி 13 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். இதுவரை முதலிடத்தை அலங்கரித்த கோலி தற்போது பின்னடைவை சந்தி்த்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது