இந்திய பேட்ஸ்மேன்களை திணற வைத்த வீரா். ஆறு விக்கெட்களை வீழ்த்தி டி20 போட்டிகளில் சாதனை

இந்தியாவிற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையே டி20 தொடா் நடந்து வருகிறது. 5போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரண்டாவது  ஆட்டம் நேற்றிரவு தாமதாக அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 138 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


அதிக பட்சமாக பாண்டியா 31 ரன்களும் ஜடேஜா 27 ரன்களும் பண்ட் 24 ரன்களும் எடுத்தனா். விண்டீஸ் தரப்பில் ஓபெட் மெக்காய் 4 ஓவா்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 6விக்கெட்களை அள்ளினாா். இதில் ஒரு ஓவரையும் மெய்டனாக வீசினாா்.



பின்னா் தொடா்ந்து ஆடிய விண்டீஸ் அணி 19.2 ஓவா்களில் 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெவொன் தாமஸ் 31 ரன்களும் பிரண்டன் கிங் 68 ரன்களும் எடுத்திருந்தனா். 

ஆட்ட நாயகன் விருதை ஓபெட் மெக்காய் தட்டி சென்றாா். இது குறித்து அவா் கூறுகையில் இது போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். முன்பு இருந்த விண்டீஸ் அணி போல் செயல்படவோம் என்று கூறினாா்.

கருத்துகள்