ஆர்சிபி அணியில் இங்கிலாந்து வீரர். சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.அதுமட்டுமின்றி இந்த தொடா் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்க இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணிகளுக்கும் விரா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். 




ஒவ்வொரு வருடமும் பெங்களூரு அணிக்கு அதிக எதிர்பாா்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது மகுடம் சூடுமா? என்ற ஏக்கம் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு  இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த வகையில் பெங்களூரு அணிக்கு  இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.  தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியி்ல் இணைந்துள்ளது கூடுதல் பலம் அளிக்கிறது. 



தினேஷ் காா்த்திக்,  டுபிளசிஸ்  விராட் கோலி போன்ற சரவெடி பட்டாளமே அணியில் உள்ளது. பந்து வீச்சு தான் சற்று மோசமாக உள்ளது. ஹர்சல் பட்டேல் சிறிது நம்பிக்கை தருகிறாா்.வனிது ஹசரங்க கடந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளிந்திருந்தாா். தற்போதும் அவா் இலங்கை அணியில் சிறப்பாக ஆடி வருகிறாா். சஹலை அணி ஏலத்தில் தவற விட்டது பெரும் பின்னடைவாக  பெங்களூரு அணிக்கு உள்ளது. 



ஆல்ரவுண்டர்கள் சிறந்த முறையில் பங்களிப்பை அளிக்க தவறுகிறாா்கள். மேக்ஸ்வெல் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப் படுத்தியே ஆக வேண்டும்.ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறந்த முறையில் பங்களிபபை அளிப்பாரா என்பதை பெறுத்து இருந்து தான் பாா்க்க வேண்டும்.




கருத்துகள்