இடுகைகள்

மத்திய அரசால் இது சாத்திமா ...?கோவிட் -19 தடுப்பூசி இலவசமா...?

படம்
  கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி உயிர்களை கொன்று குவித்து  வருகிறது.தற்போது இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய  அரசு கூறுகையில், முகக்கவசம்  அணிவதன் மூலம் நோய் பரவுவதை  தடுக்க மட்டுமே முடியும். நோயை வெல்ல  வேண்டுமேனில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாத்தியம். 18 வயது நிரம்பியவர்களுக்கு  இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், 2 வது டோஸை வெளியிட்ட நிலையில், தற்போது 3வது டோஸை தயாரித்து  வெளியிட உள்ளது.தடுப்பூசி விலை  அதிகமாக உள்ள நிலையில்,மக்களுக்கு  இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய  அரசால் முடியுமா.....? தடுப்பூசி  போட்டாலும் நோய் பரவலை கட்டுப் படுத்த முடியுமா....? என்று பல கேள்வி எழுந்துள்ளது.

வெற்றி மாறன் ஆரம்பிச்சுடாரு விடுதலை வெற்றி அடையுமா...?

படம்
பிரபல இயக்குனர் வெற்றி மாறன்   அவர்களின் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் 'அசுரன்' எனும் திரைப்படம் வெளியாகி  வெற்றி அடைந்தது. வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் பல படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்து உள்ளன. வெற்றி மாறன் படம் என்றாலே ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்நிலையில்  விஜய்சேதுபதியும், சூரியும் வெற்றி   மாறன் இயக்கத்தில் நடித்து வருகிறனர் படத்திற்கு 'விடுதலை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதில் சேதுபதி  வாத்தியாரகவும் சூரி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.இளையராஜா இசை அமைக்கிறார்.எந்த அறிவிப்பும் இன்றி படத்தின் முதல் பார்வை  வெளியானது.வெற்றி மாறன் படம்  என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம்  இருக்காது.எனவே இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தோனிக்கு உடற்தகுதி இல்லையா?? தோனி என்ன சொல்கிறார்.

படம்
 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த  ஆட்டத்தில் சென்னை ராஜஸ்தான்அணிகள்  மோதின.இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி 17  பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  இதைப் பற்றி தோனி கூறுகையில், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. எல்லா நேரங்களிலும் சிறப்பாக ஆட முடியாது.ஆனால் என்னுடைய ஆட்ட திறனில் கவனமாக இருப்பேன்.எனக்கு  வயதாகி விட்டது,ஆனாலும் என்னுடைய உடற்தகுதியை சிறப்பாக வைத்து  கொள்ள விரும்புகிறேன்.என்னை யாரும் உடற்தகுதி இ்ல்லாதவர் என்று கூறி விட கூடாது. அதில் நான் கவனமாக  இருப்பேன்.ஓய்வு பெறுவது பற்றி நான்  எந்த முடிவும் எடுக்கவில்லை. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான்,இந்த  ஆட்டத்தில் வெற்றி பெற முடிந்தது. நெருக்கடியான சூழலை சமாளிக்க கற்று கொண்டனர். அணி தலைவனாக இருந்து வீரர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டியது இதுதான் என்றார்.

அழகர் வருவாரா? நடக்குமா சித்திரை திருவிழா...?

படம்
  சித்திரை திருவிழா என்பது தமிழகத்தில்  பிரசித்திப் பெற்ற திருவிழா ஆகும். விழாவின் சிறப்பே அழகர் வைகையில் எழுந்தருளுதல் தான்.சென்ற வருடம்  கொரோனா நோய் பரவல் காரணமாக விழா நடை பெறாமல் போய் விட்டது.  இந்த வருடமும் அதே கதை தான் தொடர்கிறது. இதனால் பக்தர்கள் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. நீதிபதிகள் சிவஞானம்,ஆனந்தி முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது.  கொரோனா நோய் தொற்று தீவிரமாக உள்ள நிலையில் விழாவை  பாதுகாப்பாக நடத்தமுடியாது என்றனர் நீதிபதிகள். பின்னர் மனுதாரர்களின் வக்கில் ஆஜராகி விழாவை பக்தர்கள் இல்லாமல் நடத்தி,தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாவது வெளியிட வேண்டும் என்றனர்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கையும் தள்ளுபடி செய்தனர்

அருண் விஜயின் அடுத்த படம் ,முதல் பார்வை வெளியானது

படம்
  அருண்விஜய் தற்போது அறிவழகனுடன் இணைந்து பணி புரிந்து வருகிறார். குற்றம் 23 தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படம் ஸ்பை  த்ரில்லர் படமாக இருக்கம் என்று இயக்குனர் கூறுகிறார். .தற்போது படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. படத்திற்க்கு பார்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.படத்தை ஆல் இன் ஆல்  தயாரிப்பு நிறுவனர் விஐய் ராகவேந்திரா தயாரிக்கிறார்.இப்படத்தின்  நாயகியாக ரெஜினா கேசன்ட்ரா அறிமுகமாகிறார்.குற்றம் 23 படத்தை  காண்கையில் மருத்துவ த்ரில்லராக இருந்தது, பார்டர் படத்தை பொருத்த  வரையில் ஸ்பை த்ரில்லாக தயாரித்து உள்ளனர், தீவிரவாதத்தை  எதிர்ப்பதுப் போன்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் படத்தின் கதை களம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ணன் படம் வன்முறையை தூண்டுகிறதா...??? மக்கள் கருத்து என்ன...???

படம்
  பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன்  திரைப்படம் வெளியானது.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கதையின் நாயகனை  சார்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக சித்தரித்து உள்ளனர்.  அதே சமயம் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. இது  குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து இடுகையில்  "வன்முறை காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. சாலை மறியல் செய்து இருந்தாலே அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்து இருக்கும்.                                                      மாரி செல்வராஜ் போராடுவது வேறு வன்முறை வேறு . மக்களிடம் இந்த புரிதலை கொண்டு வர வேண்டும். திரையில் என்ன காண்கிறோமோ அது தான் எண்ணத்திலும் தோன்றும். ஆகையால் வன்முறையை கையால்வதை தவிர்த்து,சிந்தித்து பிரச்சனையை தீர்ப்பது போல் படமாக்கி இருக்கல...

விராட் கோலியின் ஆதிக்கம் முடிவடைந்து விட்டதா.....?!!அதிர்ச்சியில் ரசிகர்கள்

படம்
 ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் சச்சின்.அவரின் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்குறார்,விராட்கோலி. 41மாதங்களாக no;1 பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தகாரராக  திகழ்ந்தார். இந்ந நிலையில் ICC சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலை வெளியிட்டது no;1 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி தன்னுடைய,no;1 இடத்திலிருந்து2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்  முதல் இடத்தை பாபர்  ஆசம் அலங்கரிக்கிறார் 865 புள்ளிகளுடன் பாபர் ஆசம் முதலிடத்தில் உள்ளார். கோலி 857  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்  இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறுகையில் பாபர் ஆசம் ஆப் சைடில் கோலியை காட்டிலும் நல்ல ஷாட்டுகளை ஆடக்கூடியவர். கோலி உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் வல்லவர். இருவரும்  தங்களது குறைகளை கலந்துரையாடி குறைகளை போக்கி கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இன்னும் சிறந்த வீரராக முடியும்  என்கிறார். கோலி சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிறது., இன்னும் ஓரு முறை கூட ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது இல்லை., மீண்டும் no;1 அரியணையை  அமருவாரா? இந்த கேள்விகளுக்கு கோலி தன் மட்டைய...