அழகர் வருவாரா? நடக்குமா சித்திரை திருவிழா...?

 


சித்திரை திருவிழா என்பது தமிழகத்தில்  பிரசித்திப் பெற்ற திருவிழா ஆகும்.

விழாவின் சிறப்பே அழகர் வைகையில் எழுந்தருளுதல் தான்.சென்ற வருடம் 

கொரோனா நோய் பரவல் காரணமாக விழா நடை பெறாமல் போய் விட்டது. 

இந்த வருடமும் அதே கதை தான் தொடர்கிறது.



இதனால் பக்தர்கள் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்

பட்டது. நீதிபதிகள் சிவஞானம்,ஆனந்தி முன்பு நேற்று விசாரனைக்கு வந்தது. 

கொரோனா நோய் தொற்று தீவிரமாக உள்ள நிலையில் விழாவை 

பாதுகாப்பாக நடத்தமுடியாது என்றனர் நீதிபதிகள். பின்னர் மனுதாரர்களின்

வக்கில் ஆஜராகி விழாவை பக்தர்கள் இல்லாமல் நடத்தி,தொலைக்காட்சி

ஊடகங்கள் வாயிலாவது வெளியிட வேண்டும் என்றனர்.அதை ஏற்க மறுத்த

நீதிபதிகள், வழக்கையும் தள்ளுபடி செய்தனர்



கருத்துகள்