மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று
முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில்
சென்னை ராஜஸ்தான்அணிகள்
மோதின.இதில் சென்னை அணி வெற்றி
பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி 17
பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே
எடுத்தார்.
இதைப் பற்றி தோனி கூறுகையில்,
ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது.
எல்லா நேரங்களிலும் சிறப்பாக ஆட
முடியாது.ஆனால் என்னுடைய ஆட்ட
திறனில் கவனமாக இருப்பேன்.எனக்கு
வயதாகி விட்டது,ஆனாலும் என்னுடைய
உடற்தகுதியை சிறப்பாக வைத்து
கொள்ள விரும்புகிறேன்.என்னை யாரும்
உடற்தகுதி இ்ல்லாதவர் என்று கூறி விட
கூடாது. அதில் நான் கவனமாக
இருப்பேன்.ஓய்வு பெறுவது பற்றி நான்
எந்த முடிவும் எடுக்கவில்லை. பவுலர்கள்
சிறப்பாக செயல்பட்டதால் தான்,இந்த
ஆட்டத்தில் வெற்றி பெற முடிந்தது.
நெருக்கடியான சூழலை சமாளிக்க கற்று
கொண்டனர். அணி தலைவனாக இருந்து
வீரர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டியது
இதுதான் என்றார்.
கருத்துகள்