YouTube has a new changes. The number of dislike can no longer be seen in the video by the uploaders. Uploaders who see this will be tormented. That's what You Tube is all about.
சோகமாக இருக்காதீர்கள் . அது நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு நம் வாழ்க்கையில் நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. சில சம்பவங்கள் நன்மை பயக்கின்றன. சில விசயங்கள் நமக்கு மோசமான உணர்வு நிலையையும், மிகுந்த துக்கத்தையும் தோற்றுவிக்கின்றன. இதுவே வாழ்க்கையின் போக்கு. பல நேரங்களில் துன்பத்தை கடக்கின்ற மனப் பக்குவம் நேரம் கடந்தே வருகின்றன. மகிழ்ச்சியான விசயங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை துன்பமான விசயங்களால் கொடுக்க முடியாது. துன்பங்கள் கொடுக்கக் கூடிய விசயங்களை இன்பமான நேரத்தால் கொடுக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி மீட்பு கண்டிப்பாக நடைபெறும். எனவே மன மகிழ்வோடு இருங்கள். எதை குறித்தும் அதிக பய உணர்வோடு இருக்க வேண்டாம். எதை குறித்தும் குற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். வாழ்வு மிகப் பெரியது. வாழ்வு அனைத்தையும் மாற்றக் கூடியது. எனவே அன்பர்களே சோகமாக இருக்காதீர்கள். களிப்போடு வாழ்க்கையை கழியுங்கள்.
தற்போது ஐரோப்பாவில் யூரோ கால்பந்து தொடர் நடந்து வருகிறது.தற்போது சூப்பர் 16 சுற்று நடந்து வருகிறது.லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் யூரோ கோப்பைையை குரோஷியா அணி தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.குரோஷிய அணி கேப்டன் லூக்கா மேட்ரிச் கோப்பையை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். போர்ச்சுக்கல் அணி கேப்டன் ரொனால்டோ,எதிர் அணியின் டிபாக்ஸ்க்குள் நுழைந்து விட்டாலே பெனால்டிக்காக தான் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது.இது தான் அவரின் ராஜ தந்திரம்.இது தற்போது பலிக்காது என்றும் கூறுகின்றனர் யூரோ கோப்பையை குரோஷியா தான் வெல்லும் என்றும் வலைதளத்தில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். உலக கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
குணநலன்: வாழ்க்கையில் பெரிதாக வெற்றி அடைந்தால் மட்டுமே அனைவரும் நம்மை மதிப்பர் என்ற கருத்து நம் வாழ்க்கையில் மேலோங்கி உள்ளது. ஆனால் உண்மையில் அவை எல்லாம் பலன் அளிக்கக்கூடிய ஒன்றா? வாழ்க்கையின் இறுதியில் அவற்றால் நிம்மதி ஏற்படுமா? என்று ஆராய்ந்தால் எல்லை என்ற பதிலே கிடைக்கும். அதற்காக எதையுமே முயற்சிக்காமல் ஒரு சோம்பேறித்தனமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று குறிப்பிடவில்லை. பெரும்பாலும் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிற நம்முடைய பயணத்தில் உண்மைத் தன்மையின் அளவு குறைந்துக் கொண்டே வருகிறது. அப்பொழுது வெற்றி எப்படி இருக்க வேண்டுமெனில், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் , நேர்மையான முறையில் ஒரு வெற்றி அமையுமெனில் அதுவே சிறந்ததாக இருக்க முடியும். கருணை , இரக்கம், அன்பு, பரிவு இதனை விட மிகுந்த மனிதனை அழகாகக் கூடிய விசயங்கள் இவ்வுலகில் இல்லை. உங்கள் துறையை ஆழமாக காதலியுங்கள். இந்த வெற்றித் தோல்விக்கு அப்பாற்பட்டு உழையுங்கள். வெற்றி செயற்கையானது. அன்பு இயற்கையிலே உள்ளது.
கருத்துகள்