காண்டாகிய ராகுல் ஷிந்தா
நேற்று அரங்கேறிய ஆட்டத்தில் RCB VS SRH அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள்
குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 41பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் கோலி 29 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார் , டிவில்லியர்ஸ் 5
பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் .பின்னர் 150
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் 20
ஓவர்முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6ரன்கள்
வித்தி\யாசத்தில் பெங்களூர் அணி 2வது வெற்றியை சுவைத்தது.
பெங்களூர் அணி மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . அவர்
தற்போது செம்ம பார்மில் இருக்கிறார்.கடந்த ஆட்டத்துலும் 28 பந்துகளில் 39
ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதையில் தள்ளி விட்டார் .
கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இவர் ஒரு ஆட்டத்தில் கூட
சோபிக்கவில்லை. 8 ஆட்டங்களில் களமிறங்கிய இவர் ஒற்றை இலக்கை கூட
தாண்டவில்லை. பெங்களூர் அணிக்கு வந்த பிறகு பவுலர்கள விட்டு தொவைய
துவைக்கிறாரு.'' ஏன்டா பஞ்சாப் ல இருக்குறப்ப ஒன்னும் பண்றதில்ல,மத்த
டீமுக்கு போண உடனே எல்லா வித்தையும் காட்டுறது இருங்கடா உங்க
எல்லோரையும் செமிச்சுபுடுறேன்'' அப்டினு செம்ம காண்டுல இருக்காங்க
பஞ்சாப் அணியின் உரிமையாளர் .......
கடந்த ஆண்டு பஞ்சாப் மேக்ஸ்வெல்லை 10.75 கோடிக்கு வாங்கியது
குறிப்பிடதக்கது
கருத்துகள்