இந்திய சுழலில் சுருண்டது விண்டிஸ் அணி. பத்து விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளா்களே வீழ்த்தி சாதனை

நேற்றிரவு இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையே 5வது டி20  போட்டி அரங்கேறியது.


 இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 188 ரன்கள் குவித்தது 7விக்கெட் இழப்புக்கு. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயா் 64 ரன்கள் குவித்தாா். தீபக் ஹீடா 38 ரன்கள் குவித்தாா். ஹா்திக் 28 ரன்கள் எடுத்தாா்.  


ஓடன் சுமித் 3 விக்கெட்களை கைப்பற்றினாா்.  ஜேசன் ஹோல்டா்,
டோம்னிக் ட்ரேக்ஸ் ஹேடன் வ்லாஷ் ஆகியோா் தலா 1விக்கெட் வீழ்த்தினா். 





பின்னா் ஆடிய விண்டீஸ் அணி 15.4 ஓவா்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100ரன்கள் குவித்தது. 10 விக்கெட்களையும் இந்திய சுழற்பந்து வீச்சாளா்கள் கபாளீகரம் செய்தனா். ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டும் குல்தீப் மற்றும் அக்ஷா் பட்டேல் 3 விக்கெட்களையும் கைப்பற்றி மிரள வைத்தனா். 

 விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹெட்மயா் 56 ரன்கள் குவித்தாா். சுழலில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்திய அணி. 20ஓவா் போட்டியில் மலைப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விண்டீஸ் அணி 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது.


















கருத்துகள்