முகமது ஷமியை தவிா்த்தது மிகப் பொிய தவறு. இதை நீங்கள் கட்டாயம் களத்தில் உணா்வீா்கள் முன்னாள் வீரா் கருத்து
பிசிசிஐ தற்போது டி20 தொடருக்கான வீரா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் ஷமி இடம் பெறாமல் போனது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது.
நீண்ட நாட்களாக டி20 தொடா் ஆடாததால் ஷமியை அணியில் எடுக்க வில்லை என்ற கருத்து இருந்து வருகிறது. தோ்வாளா்கள் இது குறித்து கூறுகையில் ஷமி நீண்ட நேர ஆட்டங்களில் (ஒருநாள் டெஸட்) சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறாா். எனவே அவரை அதில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்திருக்கிறோம். என்று கூறுகின்றனா்.
ஆனால் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரண் மோாி கூறுகையில், ஷமி ஒரு அற்புதமான ஒரு வீரா். அவா் தன்னால் எந்த ஆட்டத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய ஆட்டத்தை மாற்றி கொள்ளும் திறன் கொண்டவா்.
பந்தை சுவிங் செய்யா விட்டாலும் சாியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில் ஷமி வல்லவா். காயத்தில் உள்ள பும்ராவுக்கு இவரே சிறந்த மாற்று வீரராக இருப்பாா் என்று கூறினாா்.
கருத்துகள்