இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளா் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளாா்.
இது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும். பும்ராவிற்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்கலாம். ஆனால் பும்ரா ஏற்படுத்தும் தாக்கத்தை வேறு எந்த வீரரும் அவ்வளவு எளிதாக ஏற்படுத்தி விட முடியாது.
இது போன்ற நேரங்களில் சில இழப்புகள் ஏற்பட தான் செய்யும். அதை கடந்து வர வேண்டும். காயம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் இது போன்ற நேரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மாற்று வீரர் குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விவாதித்து வருகிறது.
கருத்துகள்