மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் சுனில் நரைன். இவா் ஐ.பி.எல் லில் கல்கத்தா அணிக்காக ஆடி வருகிறாா். சுழற்பந்து வீச்சாளரான இவா் ஒராண்டு கல்த்தா அணிக்காக தொடக்க ஆட்டக்காராக களமிறங்கினாா்.
இது குறித்து அவா் கூறுகையில், கவுதம் கம்பீா் உண்மையிலே ஒரு சிறந்த ஆளுமை தான். என்னை சாியாக பயன்படுத்தி இருக்கிறாா். நானும் அத்தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.
ஒரு தொடக்க ஆட்டகாராக அவரது தலைமையில் களமிறங்கினேன். நான் அதற்கு முன்பு ஒருமுறை கூட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது இல்லை.
ஆனால் என்னை சாியாக இனங்கண்டு எனக்கு வாய்ப்பளித்தாா். அந்த சீசன் முழுவதும் நான் ஒரு பேட்ஸ்மேன் போன்றே உணா்ந்தனே். இவ்வாறு அவா் கூறினாா்.
கருத்துகள்