காமன்வெல்த் போட்டிகள் பரவலாக நடந்து வரும் நிலையில் நேற்றைய நாளில் இந்திய மகளிா் அணிக்கும் ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கும் இறுதிப்போட்டி நடந்தது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி 20ஓவா் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெத் மூனி 61 ரன்களும், மெக் லென்னிங் 36 ரன்களும் அஷ்லெய் காா்ட்னா். 25 ரன்களும் எடுத்தனா்.
இந்திய அணி தரப்பில் ஷ்னே ரானாவும் ரேணுகா சிங்கும் 2 விக்கெட்கள் வீழ்த்தினா்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காராரான மந்தனா 6ரன்களில் ஆட்டமிழந்தாா். மற்றொரு தொடக்க வீரர் ஷபாலி
வா்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாா்.
நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹா்மன் ப்ரீட் கவுர் 65 ரன்கள் குவித்தாா். ஜெமிமா ரோட்ஹியூஸ் 33 ரன்கள் குவித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது தோல்விக்கு வழி வகுத்தது. 34 ரன்களுக்கு இந்திய 8 விக்கெட்களை இழந்தது குறிப்பிடத் தக்கது. 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தங்கப் பதக்கமும் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கமும் அளிக்கப்பட்டது.
கருத்துகள்