ரொனால்டோவுடைய உடற்கட்டின் ரகசியம். இந்த வயதிலும் கச்சிதமான உடற்கட்டமைப்புடன் இருக்கிறாா்.

உலக கால்பந்து வரலாற்றில் தனக்கு என்று தனி முத்திரைப் பதித்தவா் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போா்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து அணியின் தலைவரும் இவா் தான். பல ஐரோப்பிய லீக் போட்டிகளில் பல முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளாா். 


இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பக்கத்தில் தற்போது அதிக பின் தொடா்பவா்களை  வைத்துள்ளாா். கிட்டதட்ட 470 மில்லியன் மக்கள் இவரை பின்தொடா்கிறாா்கள்.  இன்ஸ்டாகிராமில் மனிதா்களில் இவரே அதிக பின் தொடர்பவர்களை கொண்டு சாதனைப் படைத்துள்ளாா்.


இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு கிட்ட தட்ட12 கோடி முதல் பெறுகிறாா் என தகவல். தற்போது அவா் அவருடைய பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளாா். 37 வயதிலும் இவ்வளவு கட்டுகோப்பாக உடலை பராமரிப்பது சவாலான விசயம்தான். தொடா்ந்து பயிற்சி செய்வது  சரியான உணவு பழக்கத்தை பின்பற்றுவதே ரகசியம் என்று கூறுகிறாா்.

கருத்துகள்