சமீப காலமாக கிரிக்கெட் வீரர்கள் நிறைய போ் தங்களுடைய பாஃா்மை இழந்து வருகின்றனா். சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைப் பெற்ற பொழுதும் ப்ரீமியா் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறாா்கள். இது குறித்து பாா்க்கும் பொழுது டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதால் தான் இது மாதிரியான பிரச்சனைகள் எழுகிறது.
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 31 வயதிலே ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டி20போட்டிகள் வீரர்களின் ஆட்டத்திறனை பாதிக்கிறது என்கிற கருத்து எழுகிறது.
இந்த விசயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரையும் பாதிக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் இதுபாேன்று பாஃா்ம் ஆவுட் ஆவதில்லை அப்படியே இருந்தாலும் தங்களுடைய ஆட்டத்திறனை மீட்டெடுத்து விடுகிறாா்கள். உதாரணமாக புஜாரா, ஜேம்ஸ் ஆன்டா்சன், போன்றவா்கள் தங்களுடைய ஆட்டத்திறனை இருந்து அவ்வளவு எளிதாக இழந்து விடுவதில்லை
டி20 போட்டிகள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வளவு சிறப்பாக இல்லை அதே சமயம் ப்ரீமியா் லீக் போட்டிகள் வலுப்பெற்ற பிறகு டி20 போட்டிகள் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிற போது அடித்து ஆடும் பாணியையே கையாளுகின்றனா்.
அடுத்தடுத்து டி20 தொடா் முடிந்தவுடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆட்டத்தை மாற்றுவதே இங்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
கருத்துகள்