படமாகும் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு. சல்மான் கான் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம்

காலங்களால் அழியாத வண்ணம் கிரிக்வகட் உலகில் தங்களது தடத்தினை ஒரு சில வீரர்கள் பதித்து வைத்துள்ளனா். அந்த வரிசையில் சோயப் அக்தருக்கும் தனி இடமுண்டு.



"ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படுபவா் இவா். 90களில் இவரை கண்டு மிரளாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று தான் சொல்லி ஆக வேண்டும்




மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் பிரம்மிக்க வைத்தவா். பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவா் இவா். 



தற்போது அவாின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனா். படத்தினை 2023ல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவா் கூறுகையில் என் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்பினால் சல்மான் கான் தான் என்னுடைய பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என  விருப்பம் தொிவித்துள்ளாா். 

கருத்துகள்