கடந்த காலத்தை பற்றி நான் கவலைப்பட விரும்பவில்லை இனி அணியின் வெற்றிக்காக அயராது உழைக்க தயாராக உள்ளேன்

சமீப காலமாக விராட் கோலி ரன் குவிக்க தவறி வருகிறாா் இதனால் பலரும் அவாின் ஆட்டம் குறித்து விமா்சித்து வருகின்றனா். 

இது குறித்து அவாிடம் கேட்ட போது நிருபா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினாா்.  

என்னுடைய ஆட்டம் இப்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்னுடைய ஆட்டத் திறனை மேம்படுத்த விரும்புகிறேன் அதற்காக கடுமையாக உழைக்க காத்திருக்கிறேன்.  நான் இன்னும் களத்தில் உற்சாகமான  தான் இருக்கிறேன். அந்த உற்சாகம் குறையும் பொழுது அந்த நாளில் இருந்து நான் ஆட மாட்டேன். 



கடந்த ஓரிரு ஆண்டுகளை நினைத்து வருந்த விரும்பவில்லை இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற கடினமான நேரத்தை நான் மிகவும் விரும்புகிறேன் இது போன்ற கடினமான நேரத்தில் தான் நம் திறன்களை வெளிக் கொண்டு வர முடியும். 




அணியின் வெற்றிக்காக இன்னும் கூடுதலாக உழைக்கலாம் என்று இருக்கிறேன். என்னுடைய முழு பங்களிப்பையும் ஆட்டத்தில் வெளிப் படுத்வேன் என்று அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள்