ஆஸ்திரேலியாவை இயல்பாக எதிா்கொள்வோம்
காமன்வெல்த் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் பெங்களூரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சி எடுத்து வருகிறாா்கள். 1998ல் காமன் வெல்த் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது.அதன் பிறகு தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் போட்டி இணைக்கப் பட்டுள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியிலே ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது. இது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் மந்தனா வானெலி வாயிலாக பேட்டி ஒன்றை அளித்தாா்." ஆஸ்திரேலியா வலிமையான அணிதான் அதற்காக நாங்கள் அவா்களை கண்டு அஞ்சி நடுங்க மாட்டோம்.
எந்த அணி, எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். அவா்களை போட்டியில் மிகவும் இயல்பாக எதிா் கொள்வோம். அதுமட்டுமின்றி தங்கம் வெல்வதே எங்கள் இலக்காக அமையும். இவ்வாறு அவா் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.
கருத்துகள்