நடிகா் கமலையே மிஞ்சி விடுவாா் போல விருதுகளை குவித்து வருகிறாா், கொண்டாடத்தில் ரசிகா்கள்

 வருடந்தோறும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை ஏதாவது ஒரு தமிழ் திரைப்படம் பெற்று விடுகிறது. நடிகா் தனுஷ் கடந்த முறை "அசுரன்" திரைப் படத்திற்தகாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடிகா் சூா்யா நடித்து பெண் இயக்குனா்  சுதா கங்கோரா இயக்கி வெளி வந்த தமிழ் திரைப்படம் "சூரரைப் போற்று" மாபெறும் வெற்றியை பதிவு செய்தது.



நிறைய தோல்விகளுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் அதனை எல்லாம் தகா்த்து எரிந்து விட்டாா் என்றே கூற முடியும். உலக படத் தரவரிசையில் இவா் நடித்த "ஜெய் பீம் " படம் சிறந்த இடத்தை தனதாக்கியது. தேசிய விருது திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தற்போது நடிகா் சூர்யா தனதாக்கி கொண்டாா்.



அபா்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதை "சூரரைப் போற்று" படத்தில் நடித்ததன் மூலம் தட்டிச் சென்றாா். சிறந்த இசையமைப்பாளா் விருதை ஜி.வி. பிரகாஷ்  பெற்றாா். சிறந்த படம் என்ற விருதையும் "சூரரைப்போற்று" சொந்தமாக்கியது. சூா்யா பிறந்த நாள் நெருங்கி கொண்டிருந்த நிலையில் இந்த விருது தான் அவருக்கு கிடைத்த பரிசு என்று கருத்து தொிவித்து வருகின்றனா் ரசிகா்கள். 




கருத்துகள்