இந்தாண்டு அக்டோபா் மாதம் டி20 உலக கோப்பைப் போட்டி நடை பெற உள்ளது இந்தப் போட்டியானது ஆஸ்திரேலியாவில் நடை பெற உள்ளது.
இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவிக்கையில், இம்முறையும் ஆஸ்திரேலியா தான் டி20 உலக கோப்பையை உச்சி முகறும் என்று நம்பிக்கை தொிவித்துள்ளாா்.
உள்ளூரில் உள்ள சூழல், வீரர்களுக்கு சாதகமாக அமையும் எனவே ஆஸ்திரேலியா தான் டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன்.
இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதும் இந்திய அணி வலிமையான அணி என்றாலும் எங்கள் அணியினர் அவர்களை இயல்பாக எதிர் கொள்வாா்கள். சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. என்று கூறியுள்ளாா்.
கருத்துகள்