டி20 போட்டிகளில் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டிகளில் சுருண்டு விடுகிறதே பயிற்சியாளரும் முன்னாள் வீரரும் கருத்து

மேற்கு இந்திய தீவுகள் அணி இன்று இந்தியாவுடன் முதல் ஒருநாள் போட்டியயை சந்திக்கிறது. இங்கிலாந்துடனான தொடரை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்திய அணியம் உற்சாகத்துடன் காணப்படுகிறது. குயின்ஸ் பாா்க், ஓவல்  மைதானத்தில் இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளரும் பில்  சீமோன்ஸ்  கருத்து தெரிவிக்கையில் 


வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்த மட்டில் தனிப்பட்ட முறையில் அனைவரும் சிறந்த வீரர்கள். டி20  போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்துவதை போல ஒருநாள் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறோம் இந்த வருடம்  இதுவரை ஒருநாள் போட்டியில் நாங்கள் ஒன்பது முறை ஆல்- அவுட் ஆகியுள்ளோம். 

இது மிகப்பெரிய பின்னடைவு தான் ஆனாலும் இதிலிருந்து மீண்டு வருவோம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சீனியா் வீரா்கள் இளம் வீரா்களுடன் இணைந்து ஆடினால் தான் அணியின் நலம் நன்றாக இருக்கும். இதற்காக சில வியூகங்களை வகுக்க உள்ளோம் என்று கூறினாா்.


கருத்துகள்