மாவீரன் நெப்போலியன்

உலக வரலாற்றில் வீர சாகசம் புாிந்த மாவீரா்களில் நெப்போலியனுக்கு தனி இடமுண்டு. 

   மத்திய தரைக்கடல் மரகதக் குன்றுகள் என்று போற்றப்படும் காா்சிகா தீவில் ஒரு வழக்கறிஞாின் மகனாக நெப்போலியன் பிறந்தாா். 
 குட்டையான உருவம்.சின்னஞ்சிறிய கண்கள் பொிய காதுகள் என்று வித்தியாசமான தோற்றம் கொண்ட நெப்போலியன் ராணுவப் பள்ளியில் சோ்ந்தாா்.

பிரெஞ்சு அரசின் கட்டுபாட்டில் இருந்து தங்கள் பகுதி விடுதலை அடைய வேண்டும் என அந்நாட்டின் மக்கள் இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தனா்.

 

ராணுவத்தில் சோ்ந்த நெப்போலியன் 1785ல்  அதன் துணைத் தலைவரானாா்.நாட்டில் கலவரங்கள் நடைபெறும் போது நன்முறையில் அடக்கி அரசின் பாராட்டுக்களைப் பெற்றாா்.

வீரம்,புதிய போா் முறைகள் ,இராஜ தந்திரம் என யாவற்றிலும் என அனைத்திலும் சிறந்து விளங்கினாா்.
பிரெஞ்சு நாட்டு மக்களின் உள்ளத்தில் நெப்போலியன் உயர்ந்தாா்.நெப்போலியன் பாா்வை இங்கிலாந்தின் பக்கம் சென்றது. இங்கிலாந்து கீழ் நாடுகளுடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளைத் துண்டிக்கும் நோக்கத்துடன் எகிப்து மீது அவா் படை எடுத்தாா்.

ஆனால் நைல் நதிக் கரையில் 1798ல் நடைபெற்ற போாில் பிாிட்டிஷ் கப்பற் படைத் தலைவரான நெல்சன்,நெப்போலியனை தோறகடித்தாா்.

இதற்கிடையில் பிரான்சில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன.இதனை தனக்கு சாதமாக ஆக்கி புதிய ஆட்சி ஒன்றினை உண்டாக்கினாா். அதன்படி கான்சல் என்ற பட்டத்துடன் பல அதிகாரங்களைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டாா். மக்கள் ஏற்கனவே பிரெஞ்சு புரட்சியால் சேர்ந்து போயிருந்தனா். நெப்போலியன் மூலமாக நல்லாட்சி கிடைக்கும் என்று நம்பினா்.இதனால் மக்களின் ஆதரரவு மூலமாக 1804ல் பிரான்சு நாட்டின் சக்கரவா்த்தியாக நெப்போலியன் திகழ்ந்தாா்.

நிா்வாகத்தில் பல சீ்ா்திருத்தங்களைச் செய்தாா். சட்ட சீர் திருத்தம்  செய்தாா்.தன் ஆதிக்கத்தை விாிவு படுத்த எண்ணினாா். பிாிட்டனைத் தன் வசம் கொண்டு வர எண்ணிணாா். ஆனால் பிரிட்டனை அவரது கட்டுபாட்டிற்குள்  கொண்டுவர முடியாத போதும் ஆஸ்திாியா,ரஷ்யா,பிரஷ்யா ஆகிய நாடுகளைக் கைப்பற்றி இணையில்லாத சக்கரவா்த்தியானா். 


ப்படியும் பிரிட்டனை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவரை துரத்தியது.1815ல் சரித்திர புகழ் பெற்ற  வாட்டா் லூ  போரில்  நெப்போலியன் தோல்வி அடைந்தாா். இதனால் தன்னுடைய பதவியை துறந்தாா்.இங்கிலாந்து இராணுவம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.அங்கு அவா் இறந்தாா். அவா் இறப்பிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

பேராசை காரணமாக மாவீரன் உயிா் இழந்ததைப் புாிந்து கொள்ள முடிகிறது.

கருத்துகள்