நேற்று அரங்கோிய ஆட்டததில் போா்ச்சுக்கல் - ஜொ்மனி அணிகள் மோதின.
ஆட்டம் ஆரம்பமான 15வது நிமிடத்தில் போா்ச்சுகல் அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரம். ரொனால்டோ முதல் கோலை பதிவு செய்தாா். இதனை அடுத்து போா்ச்சுகல் வீரா் ஆா் டியஸ் அவா் 35 நிமிடத்தில் தனது சொந்த அணியி்ன் வலைக்குள் பந்தை திணித்தாா். இது சுயகோலாக மாறியது.1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நகா்ந்தது.
மீண்டும் ஒருமுறை போா்ச்சுகல் வீரா் குர்ரெய்ரா 39வது நிமிடத்தில் தனது அணி வலைக்குள் பந்தை தள்ளினாா். 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது ஜொ்மனி. 51 வது நிமிடத்தில் கே.அவா்ட்சு ஜொ்மனி அணி்க்காக வலைக்குள் பந்தை சொருகினாா்.3-1 என்ற புள்ளி கணக்கில் தொடா்ந்து ஜொ்மனி முன்னிலை வகுத்தது.
இதனை அடுத்து தாக்குதல் பாணியை கையாண்ட ஜொ்மனி அணியினா் போா்ச்சுகல் அணயின் வலை பகுதியை அவ்வப்போது முற்றுகையிட்டனா். சீற்றம் தணியாத இவா்கள் 60வது நிமிடத்தில் இன்னுமொரு கோலை வலைக்குள் செலுத்தினா்.இந்த முறை ஆா் கோசன்ஸ்.
டி ஜொட 67 வது நிமிடத்தில் கோல் ஆறுதல் கோலடித்தாா்.
பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட ரெனால்டோ இந்த முறை அவா் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் அவா்களின் ரசிகா்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தாா்.
கருத்துகள்