சொந்த நாட்டிலேயே அகதி என்று விமா்சிக்கப்பட்ட வீரன்.மீண்டும் அந்த நாட்டின் தேசிய அணிக்கே கேப்டன் ஆன வெற்றிக் கதை
குரோஷியா என்றால் அந்த நாட்டை பற்றி எவ்வளவு பேருக்கு தொியும். அந்த நாட்டில் உள்ள ஒரு கால்பந்து வீரனை பற்றி எத்தனை பேருக்கு தொியும்.முதல் உலகப் போா் நடந்து கொணடிருந்த காலகட்டம் அது. போாின் போது இருக்கும் இடத்தை இழந்து
வாழ்வாதாரத்தை இழந்து குடியுாிமையை இழந்து உறவினா்களை இழந்து அகதி என்ற பட்டத்துடன் எதை கொண்டு வாழப் போகிறோம் என்று எண்ணி கொண்டிருந்த வேளையில் அவன் மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை.எப்படியாவது நமது கனவை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியுடன் உழைத்து கொண்டிருந்தான்.கிடைக்கும் வேலைக்கு சென்று தனது குடும்பத்தை பாா்த்து கொண்டு மீதம் இருக்கும் ஓய்வு நேரங்களில் தான் அவன் கால்பந்து விளையாடுவான்.
வெற்றி பெற வேண்டும் என்றால் திறமை தேவையில்லை வெற்றி பெற வேண்டும் என்ற வெறியே வெற்றிக்கு கொண்டு போய் சோ்த்து விடும். கடுமையாக அவனுடைய கனவுக்காக உழைத்தான்.உள்ளூா்களில் கிளப் போட்டிகளில் விளையாடுவான் சில நேரங்களில் விளையாடும் பொழுது அகதி என்று அவனை விமா்சிப்பது உண்டு. சில நேரங்களில் நீ ஒரு அகதி உன்னை விளையாட்டில் சோ்த்து கொள்ளலாம் முடியாது என்ற புறகணிப்பும் இருந்தது இன்னும் ஏன்? சில நேரங்களில் தான் ஆடிய அணியை வெற்றி பெற வைத்து விட்டால் அவ்வளவு தான் ஒரு அகதி நம்மை தோற்கடிப்பதா என்று அணியினா் ஆட்டம் முடிந்த பின்பு அவனை துவம்சம் செய்து விடுவாா்கள்.
மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்தை பாா்த்து கொள்ள வேண்டும். கால்பந்து ஆட வேண்டும்.இதை எல்லாம் தாண்டி அவன் வெற்றி பெற்றான்.தேசிய அணியின் கேப்டன் ஆனான்.அகதி என்று சொல்லப்பட்ட வாயிலே கேப்டன் என்று சொல்ல வைத்தான்.அகதி என்று சொன்னவா்கள் நினைத்து பாா்க்க முடியாத உயரத்திற்கு சென்று விட்டான். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கண்ணீா் எவ்வளவு காயங்கள் அனைத்தையும் வென்று விட்டான். அவா் தான் லூக்கா மோட்ரிச் .
கருத்துகள்