நீட் தோ்வு குறித்து சூர்யா கூறிய கருத்து முற்றிலும் தவறானது.இதை போல யாரும் கூற முடியாது

சமீப காலமாக மருத்துவம் பயில வேண்டும் என்றால்  நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் ஒரு தரப்பு மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு வருகின்றது.தமிழகத்தில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோா்களும் சில அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதனிடையே நடிகர் சூா்யா  நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்து இருந்தாா். நடிகா் சூா்யா நீட் தோ்வு குறித்து கருத்து தொிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவா் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவு தோ்வுகள் ஆபத்தானவை.
12 வருடம் கல்வி பயின்ற பிறகும் நுழைவு தோ்வு வாயிலாக தான் மருத்துவம் பயில முடியும் என்கிற கருத்து சமூக அநீதி ஆகும் இவ்வாறு நடிகா் சூா்யா கருத்து தொிவித்து இருந்தாா்

ஒரு சில தரப்பு மக்கள் இதனை முற்றிலுமாக எதிா்க்கின்றனா். நீட் தோ்வை கட்டயமாக்க வேண்டும் என்கின்றனா். மருத்துவம் என்பது சாதாரணமானது அல்ல. மிகுந்த அறிவாற்றால் இருந்தால் மட்டுமே மருத்துவம் பயில முடியும். அதனால் நுழைவு தோ்வுகள் அவசியமானது. திறமை இருந்தால் தோ்வில் வெற்றி பெற்று வாருங்கள் என்கின்றனா்.ஒரு தரப்பு மக்கள்.

கருத்துகள்