கோஹ்லிக்கு பிறகு இவர்தானா? இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்:  

                                          தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோஹ்லி  இருப்பது நாம் அறிந்ததே. அடுத்து அணியை களத்தில் வழி நடத்த போவது யாா் என்ற காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.


முன்னாள் இந்திய வீரர்,கேப்டனுமான தோனி விராட் கோஹ்லியை ஒரு சிறந்த வீரராக்கி கேப்டன் எனும் உயரிய இடத்திற்கு கொண்டு சென்றார்.தற்போது இந்திய அணிக்கு வேறு யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்று செலக்சன் கமிட்டி முடிவு எடுக்க உள்ளது.ஆனால் வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றால் அனுபவம் மிக மிக முக்கியமானதாகும்.ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினால் அவர் விராட் கோலியை விட வயது அதிகமானவர் ஆகையால் அவர் கோஹ்லிக்கு முன்னரே அணியில் இருந்து விடை பெற்று விடுவார்.


ஆனால் கேப்டன் பதவிக்கு லோகேஷ் ராகுல் பொருத்தமாக இருப்பார்.ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தி கொண்டு இருக்கிறார்.சிறந்த ஆட்டக்காரரும் கூட. இதனிடையே ஸ்ரேயஸ் ஐயரும் ராகுலுடன் கேப்டன் பதவிக்கு மல்லுக்கு நிற்கிறார்.கேப்டன் பதவிக்கு ஷ்ரேயஸ் ஐயரும் சளைத்தவர் அல்ல.


ஷ்ரேயஸ் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியை கேப்டனாக நிர்வகித்து வருகிறார்.சமீப காலங்களில் இருவரும் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.ஆனால் அளித்துள்ளனர் ஆனால் கோஹ்லி மத்தியில் ராகுல் மீது ஒரு நல்ல அபிப்ராயம் உள்ளது.எனவே ராகுலுக்கு கேப்டன் பதவி கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
✨✨