உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கருத்து கணிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் தான் வெல்ல போகிறாரகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
                                                        ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பை நடை பெறுவது போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக கோப்பை போட்டி நடத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தி தற்போது  உலக டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி போட்டி நடக்க உள்ளது . இ்ந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன.

கருத்து கணிப்பில் நியூசிலாந்து தான் வெற்றி பெறும் என்று வாக்களித்து இருந்தனர்.சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர். 

 

இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடை பெற உள்ளது.இடம் த ரோஸ் பவ்ல். மைதானம்சௌத்தம்டர்ன்ல் நடை பெற உள்ளது. வழக்கம் போல 5 நாட்கள் கொண்ட போட்டியாக அமையும்.ஜீன் 18 தேதி நடக்கவுள்ளது.இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 3.30 தொடங்கும்.


இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ்சிங் கூறுகையில் தற்போது இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே  டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதனால் நியூசிலாந்து அணி அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்த படி மாறி கொள்வார்கள்.இதனால் நியூசிலாந்து அணியினரால் இறுதி போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறியிருந்தார்.



அது மட்டுமின்றி இங்கிலாந்திலும் நியூசிலாந்திலும் ஏரதாழ ஒரே மாதிரியான சீதோஷ்ன நிலை இருப்பதால் நியூசிலாந்திற்க்கு இது ஒர் சாதகமான விஷயமாக அமையும். அதுமட்டுமின்றி போட்டி சமனில் முடிந்தால் இரு அணியையும் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்
 

கருத்துகள்