மகாமுனி - திரை விமர்சனம், சாவதற்குள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்


மகாமுனி:-


               இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மகாமுனி   திரைபடம் வெளியானது. ஒரு தரமான  திரைபடத்திற்கு இந்த படம் எல்லா வகையிலும் தகுதியானது. ஆர்யா தனது முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்து உள்ளார்.கதை இரு வேறு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடிவடைவது தான் படத்தின் பலம். அந்த ஆளு சாந்த குமார் போட்டு படத்த செதுக்கி இருக்காரு. ஒவ்வொரு காட்சியையும் அவ்ளோ  அருமையாக படமாக்கி இருக்காங்க.


இந்த படத்த பெரிய அளவில் ரசிகர்கள்  யாரும் கொண்டாடவில்லை. இத்தகைய அருமையான படத்தினை கொண்டாடமல் இருப்பதே தமிழ் சினிமாவின் தரித்திரியம். ஏன் இன்னும் தமிழ் திரை உலகில் ஒரு ஆஸ்கர் விருது கூட இல்லை என்பதற்கு காரணமும் இது தான்.பாகுபலி, காஸ்மோரா போன்ற பெரிய படங்களை மட்டு்ம் தான் கொண்டாடுவீர்களா? ஒரு படைப்பாளியும் அவனது படைப்பும் பிரம்மாண்டமாக இருந்தல்தான் கொண்டாடுவீர்களா...?

கருத்துகள்