தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர் கமல்ஹாசன்.தன்னுடைய நடிப்பினால் பல கோடி ரசிகர்களை சாம்பாதித்து உள்ளார். ரொம்பவும் சிக்கலான, சர்ச்சைகள் நிரைந்த கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை கொடுத்து நேர்த்தியான படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பவர். புதிய ,மாறுபட்ட கருத்தினை கொண்டிருப்பவர்.சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர், அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.
தற்போது நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.தன்னை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1500 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கமல் தன் கட்சியை கலைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முடிவை கமல் எடுத்திருப்பாரா? என்று யோசிக்க தோன்றுகிறது.அரசியலில் இது சாதரணமப்பா என்று மீண்டும் கட்சியை தொடரப் போகிறாரா...... ? என்பதை பெறுத்து தான் பார்க்க வேண்டும்......
கருத்துகள்