தடுப்பூசி போட்டு கொண்டார் விராட் கோலி,மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. மத்திய அரசு தடுப்பூசியை விநியோகம் செய்து வருகிறது.மக்கள் அனைவரும் தடு்ப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திரை உலக நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி நேற்று தடுப்பூசி போட்டு கொண்டார்.
அவர் தடுப்பூசி போட்டு கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். தனது ரசிகர்களையும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார் இது தவிர இந்திய கிரிக்கெட் அணியினர் ஷிகர் தவன், ரஹானே, உமேஷ் யாதவ் ஆகியோரும் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் விராட் கோலி, மக்களிடம் அனைவரும் வீட்டிலே இருங்கள். முககவசம் அணியுங்கள், சமுக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்